Saturday, 24 November 2007

குஜராத்தில் காங்கிரஸின் பரிதாப நிலை

குஜராத் சட்டசபை தேர்தலில் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக நிறுத்த காங்கிரசில் வேட்பாளர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

அவருக்கு எதிராக போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்களை காங்கிரஸ் நிராகரித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியால் விரும்பப்படுபவர்கள் தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்து வருகின்றனர். குஜராத்தில் பா.ஜ.,வின் முக்கிய தலைவராக நரேந்திர மோடி விளங்கி வருகிறார். முக்கிய தலைவர்கள் பிரசாரம் இன்றி, நரேந்திர மோடியின் சொந்த செல்வாக்கை நம்பி யே பா.ஜ., கட்சி சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது. அந்த அளவுக்கு பலம் வாய்ந்த நபராக மோடி விளங்குகிறார். 2001ம் ஆண்டு ராஜ்கோட் - 2 தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் மோடி 14 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2002ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் யதீன் ஓசாவை 75,331 ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார். இந்த தேர்தலில் மணிநகர் தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்.

மோடிக்கு எதிராக யாரை நிறுத்துவது என்பது தான் காங்கிரசின் முக்கிய தலைவலியாக இப்போது இருக்கிறது. குஜராத்தில் பிரபலமான நடிகர், நடிகைகள் உள்ளனர். அவர்களில் யாரையாவது ஒருவரை மோடிக்கு எதிராக நிறுத்த வேண்டும் என்பது மாநில காங்கிரசின் எண்ணம். ஆனால், இதனால், காங்கிரசின் இமேஜ் காலியாகிவிடும் என கட்சி மேலிடம் நினைக்கிறது. இதற்கு பதிலாக காந்தியவாதி ஒருவரை நிறுத்தலாம் என்பது கட்சி மேலிடத்தின் கணக்கு. குறிப்பாக, மகாத்மா காந்தியின் வாரிசுகள் யாரையாவது நிறுத்தலாமா என்ற ஆலோசனையும் நடந்து வருகிறது. அந்த வகையில் காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தியை அவர்கள் அணுகினர். ஆனால், என்ன காரணத்தினாலோ தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று துஷார் காந்தி மறுத்து விட்டார்.

அடுத்ததாக நடன மங்கையும், நடிகையுமான மல்லிகா சாராபாயை நிறுத்தலாமா என்று பேசப்பட்டது. வெளிநாடு செல்ல குஜராத் மாநில அரசு அனுமதிக்காதது உள்ளிட்ட பல சிக்கல்களை அவர் சந்தித்தவர். எனவே, மோடிக்கு எதிராக அவரை நிறுத்தினால் கடும் போட்டியை ஏற்படுத்தலாம் என மாநில காங்கிரசார் கூறினர். ஆனால், அவர் வலுவான வேட்பாளர் இல்லை என காங்கிரஸ் மேலிடம் மறுத்து விட்டது. `டிவி'யில் ராமாயணம் தொடரில் சீதையாக நடித்த நடிகை தீபிகா சிகாலியாவின் கணவர் டாக்டர் சிகாலியா. 1989ம் ஆண்டு பா.ஜ., சார்பில் எம்.பி.,யாக இருந்தவர் தீபிகா. ஆனால், அதன் பிறகு பா.ஜ.,வுடனான தொடர்பு அவருக்கு விட்டு விட்டது. எனவே, நடிகை தீபிகாவின் கணவர் டாக்டர் சிகாலியாவை மோடிக்கு எதிராக நிறுத்தலாம் என்று பேசப்பட்டது. காங்கிரஸ் தரப்பில் இருந்து டாக்டர் சிகாலியாவை அணுகவும் செய்தனர். தேர்தல் செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்கிறோம் என உறுதியும் அளிக்கப்பட்டது. ஆனால், டாக்டர் சிகாலியா போட்டியிட மறுத்து விட்டார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு போட்டவர் மகந்த் தரம் தாஸ். ஒரு காலத்தில் இவர் விஸ்வ இந்து பரிஷத்தில் செயல்பட்டு வந்தார். ஆனால், ராமர் கோவில் கட்டவில்லை என்பதால் பா.ஜ., மற்றும் பரிஷத் மீது கடும் கோபத்தில் உள்ளார். அவர் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிட தயாராகவே உள்ளார். இதற்காக காங்கிரஸ் கட்சியையும் அணுகினார். ஆனால், அவரை வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் மறுத்து விட்டது. அயோத்தி என்றாலே காங்கிரசுக்கு அலர்ஜி. அது தான் இந்த நிராகரிப்புக்கு காரணம். வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்கிரசில் இந்த அளவுக்கு குழப்பம் இருப்பது நரேந்திர மோடி வட்டாரத்துக்கு மகிழ்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

--தினமலர்--

Saturday, 3 November 2007

ஜெய்ஸ்-இ-மொஹம்மதின்(JeM) மிரட்டல் கடிதம்

பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஜெய்ஸ்-இ-மொஹம்மத் (JeM) என்ற இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் டில்லி ரயில் சந்திப்பு, புகழ்பெற்ற கட்ரா (ஜம்மு & கஷ்மிர்) வைஷ்ணோதேவி கோயில் மற்றும் வட இந்தியாவிலுள்ள முக்கிய ஹிந்து வழிபாட்டுத் தலங்களை தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.

Saturday November 3, 10:47 AM

Pakistan-based Jaish-e-Mohammed militant outfit has threatened to blow up railway stations across north India and popular religious places including the Vaishnodevi shrine.

A letter written by one Tasleen Maulvi was sent to an office at Delhi Railway Junction on Friday evening that JeM would trigger explosions in various railway stations of north India, said railway and police officials.

The handwritten letter, which bears the stamp of a Meerut post office, also threatened to target the Vaishnodevi shrine in Udhampur district of Jammu and Kashmir and other religious places.

Railway stations like New Delhi, Delhi Junction, Amritsar, Ludhiana had been mentioned in the Jaish hit list.

Railway authorities have handed over the letter to the police and efforts are on to trace its source.